சினிமா

வெளியானது டெனட் படத்தின் ட்ரைலர்! உச்சகட்ட குஷியில் ரசிகர்கள்! ஆர்வத்தை தூண்டும் வீடியோ!

Summary:

tenet trailer released

'டன்க்ரிக்' படத்தை தொடர்ந்து பிரம்மாண்ட பொருட்செலவில் கிறிஸ்டஃபர் நோலன் எடுத்திருக்கும் படம் 'டெனட்'. அறிவியல், தொழில்நுட்பம் என திரைப்படங்களை கொடுத்து ரசிகர்களை அசர வைப்பவர் கிறிஸ்டஃபர் நோலன்.

சினிமா ரசிகர்கள் உலகம் முழுவதும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் திரைப்படம் டெனட். இந்த படத்தில் ஜான் டேவிட் வாஷிங்டன் மற்றும் ராபர்ட் பேட்டின்ஸன் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர். 


அண்மையில் இப்படத்தின் போஸ்டர்களும், டீசரும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை தூண்டியது. இந்த படத்தின் கரு “டைம் இன்வர்ஸ்” என்ற அறிவியல் தியரியை வைத்து எடுக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் படத்தின் ட்ரைலர் இன்று வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. செப்டம்பர் 3ம் தேதி திரையரங்குகளில் திரைப்படம் வெளியாகும் என படக்குழு ட்ரைலரில் தெரிவித்துள்ளது. 


Advertisement