ஆரம்பமாகிறது பிக்பாஸ் சீசன் 4! அதுவும் எப்போதிலிருந்து தெரியுமா? வெளியான சூப்பர் தகவலால் குஷியில் ரசிகர்கள்!

ஆரம்பமாகிறது பிக்பாஸ் சீசன் 4! அதுவும் எப்போதிலிருந்து தெரியுமா? வெளியான சூப்பர் தகவலால் குஷியில் ரசிகர்கள்!


telungu-bigboss-season-4-starts-from-september-6

பிக்பாஸ், ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்று பெருமளவில் ரசிக்கப்பட்ட நிகழ்ச்சி. இதற்கென ஏராளமான ரசிகர்கள் கூட்டமே உள்ளது. இந்த நிகழ்ச்சி முதலில் இந்தியில்  தொடங்கப்பட்டு  இதுவரை 13 சீசன்கள் முடிந்துள்ளது. இவ்வாறு  பல ஆண்டுகளாக வெற்றிகரமாக நடந்துவந்த இந்த நிகழ்ச்சி கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ் மற்றும் தெலுங்கிலும், அதனைத்தொடர்ந்து மலையாளத்திலும் தொடங்கப்பட்டு ஒளிபரப்பாகி வருகிறது. 

ஆனால் தற்போது உலகையே ஆட்டிவைக்கும் கொரோனா அச்சுறுத்தல் மற்றும் ஊரடங்கு போன்றவற்றால் பிக்பாஸ் ஒளிபரப்பு தள்ளிப் போயுள்ளது. மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சி நடைபெறுமா? இல்லையா? என ரசிகர்கள் மத்தியில் குழப்பமும் எழுந்தது.

bigboss

இந்நிலையில் தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது சீசனுக்கான பணிகள் தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது. மேலும் சமீபத்தில் அதன் டீசரும் வெளியானது. இந்த நிகழ்ச்சியை நடிகர் நாகார்ஜுன் தொகுத்து வழங்குகிறார்.

இந்நிலையில் தெலுங்கில் பிக்பாஸ் நிகழ்ச்சி செப்டம்பர் 6ம் தேதி முதல் ஆரம்பமாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால் ரசிகர்கள் பெரும் உற்சாகமடைந்துள்ளனர். மேலும் விரைவில் தமிழிலும் பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் என தமிழ் ரசிகர்களும் பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.