
திடீர் உடனல குறைவு காரணமாக தெலுங்கு பிக்பாஸ் போட்டியாளர் கங்காவா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
திடீர் உடனல குறைவு காரணமாக தெலுங்கு பிக்பாஸ் போட்டியாளர் கங்காவா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பிக்பாஸ் தமிழ் சீசன் 4 கடந்த வாரம் தொடங்கி விறுவிறுப்பாக நடந்துவருகிறது. தமிழில் பிக்பாஸ் சீசன் தொடங்குவதற்கு முன்பே தெலுங்கில் பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடந்துவருகிறது. தமிழில் நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்குவதுபோல் தெலுங்கில் நடிகர் நாகார்ஜுனா தொகுத்து வழங்கி வருகிறார்.
40 நாட்களை நெருங்கியுள்ள இந்த போட்டியில் சமூக ஊடகத்தின் மூலம் பிரபலமான பெண்மணி கங்காவா என்பவரும் கலந்துகொண்டு விளையாடிவருகிறார். மிகவும் எதார்த்தமாக விளையாடிவரும் இவருக்கு தெலுங்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆதரவு உள்ளது.
இவர் எப்படியும் போட்டியின் இதுவரை சென்று பிக்பாஸ் பட்டத்தை கைப்பற்றுவார் என எதிர்பார்க்கப்பட்டநிலையில் இவருக்கு திடீரெனெ உடல்நல குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால் பிக்பாஸ் வீட்டிற்க்கு வந்த மருத்துவர் அவரை சோதனை செய்துவிட்டு மருத்துவமனையில் அனுமதிக்கவேண்டும் என கூறியுள்ளார்.
இதனால் கங்காவா பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறார்.
Advertisement
Advertisement