பிறந்த நாளில் வெளியான அடுத்த படத்தின் போஸ்டர்! விஜய்சேதுபதி ரசிகர்கள் உற்சாகம்.!

பிறந்த நாளில் வெளியான அடுத்த படத்தின் போஸ்டர்! விஜய்சேதுபதி ரசிகர்கள் உற்சாகம்.!


tamil cinima - vijay sethupathi - sinthupath

விஜய் சேதுபதியின் பிறந்த நாளான இன்று அவருடைய அடுத்த படத்தின் போஸ்டர் வெளியாகி உள்ளதால் ரசிகர்கள் மிகவும் உற்சாகம் அடைந்துள்ளனர்.

பேட்டை படத்தை தொடர்ந்து சூப்பர் டீலக்ஸ், மாமனிதன், சைரா நரசிம்ம ரெட்டி ஆகிய படங்களில் தீவிரமாக நடித்து வருகிறார் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி.

விஜய் சேதுபதியின் பிறந்த நாளான இன்று (ஜனவரி 16 ) சைரா நரசிம்ம ரெட்டி படத்தின் மோஷன் போஸ்டர் வெளியானது. அதனைத் தொடர்ந்து ரசிகர்களுக்கு மேலும் இரட்டிப்பு சந்தோசமாக சிந்துபாத் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. 

யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக அஞ்சலி நடிக்கிறார். பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி ஆகிய படங்களை இயக்கிய அருண்குமார் இப்படத்தை இயக்குகிறார் .