ஜெயிலர் படத்தின் முக்கிய அப்டேட்.... தமன்னா செய்த விஷயம்... ட்ரெண்டிங் செய்த ரசிகர்கள்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இவர் தற்போது ஜெயிலர் திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்தத் திரைப்படம் வருகின்ற ஆகஸ்ட் மாதம் 10ஆம் தேதி வெளியாக இருப்பதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கின்றனர்.
இந்தத் திரைப்படத்தின் படப்பிடிப்புகளை தொடர்ந்து தற்போது சூப்பர் ஸ்டார் லால் சலாம் திரைப்படத்தின் படப்பிடிப்பில் பங்கேற்று வருகிறார். அதன் பிறகு அவர் நடிக்கும் 170 ஆவது திரைப்படத்தின் படப்பிடிப்புகளில் கலந்து கொள்ள உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ரஜினிகாந்த் நடித்த தர்பார் மற்றும் அண்ணா திரைப்படங்கள் தோல்வி அடைந்ததால் ஜெயிலர் படத்தை எப்படியாவது வெற்றி பெறச் செய்ய வேண்டும் என கடுமையாக உழைத்து வருகிறார் அவர் இத்திரைப்படத்தில் ரஜினி காண போர்ஷன் முடிந்துவிட்ட நிலையில் மற்ற நடிகர்களுக்கான ஷூட்டிங் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
இந்நிலையில் திரைப்படத்தின் முக்கிய அப்டேட் ஒன்றை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்திருக்கிறார் தமன்னா. படத்தில் பிரம்மாண்டமாக உருவாகும் ஒரு பாடலுக்கான ரிஹர்ஸல் புகைப்படத்தினை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்திருக்கும் அவர் ஆட்டத்திற்கு முன் அமைதி என்று தலைப்பிட்டு இருக்கிறார். இந்த போஸ்ட் தற்போது வைரலாகி வருகிறது.