
கொரோனாவிலிருந்து மீண்டு வீடு திரும்பிய தமன்னாவை அவரது பெற்றோர்கள் கட்டியணைத்து வரவேற்றுள்ளனர்.
தமிழ், தெலுங்கு சினிமாக்களில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக இருக்கும் நடிகை தமன்னாவிற்கு சமீபத்தில் வெப்சீரிஸ் ஒன்றில் நடிப்பதற்காக ஹைதராபாத் சென்றபோது லேசான கொரோனா அறிகுறிகள் தென்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து அவருக்கு பரிசோதனை மேற்கொண்டபோது கொரோனா நோய் இருப்பது உறுதிசெய்யப்பட்டது.
பின்னர் அவர் ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அதனைத் தொடர்ந்து கொரோனாவிலிருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பிய அவர் ஹைதராபாத்தில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டு இருந்தார்.
இந்த நிலையில் கொரோனாவில் இருந்து மீண்ட அவர் தற்போது மும்பையில் உள்ள தனது வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு தமன்னாவை அவரது அம்மாவும், அப்பாவும் வாசலிலேயே நின்று கட்டியணைத்து அன்புடன் வரவேற்றுள்ளனர். இதுகுறித்து மிகவும் உருக்கமான வீடியோவை தமன்னா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
Advertisement
Advertisement