சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை தற்கொலை! அதிர்ச்சியில் ரசிகர்கள்...!
"திருமணத்தை விட அந்த விஷயம் தான் எனக்கு மகிழ்ச்சியை தருகிறது" தமன்னா ஓபன் டாக்.?
தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகியாக இருப்பவர் தமன்னா. இவர் ரஜினி, விஜய், அஜித், தனுஷ், கார்த்தி, சூர்யா உள்ளிட்ட முன்னணி கதாநாயகர்களுடன் பல வெற்றி படங்களில் நடித்துள்ளார்.

தமன்னா தமிழில் மட்டுமல்லாது தெலுங்கு, ஹிந்தி திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். சமீபத்தில் வெளியான "லஸ்ட் ஸ்டோரீஸ்" வெப் சீரிஸில், தமன்னா மிகவும் நெருக்கமான அந்தரங்க காட்சிகளில் நடித்து அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கினார்.
லஸ்ட் ஸ்டோரீஸில் நடித்த பாலிவுட் நடிகர் விஜய் வர்மாவை தமன்னா காதலிக்கிறார் என்று சொல்லப்பட்டது. தமன்னாவும் இந்தக் காதலை உறுதி செய்துள்ள நிலையில், அவரளித்த பேட்டி ஒன்றில், "நான் கட்டாயம் திருமணம் செய்துகொள்வேன்.

ஆனால் இப்போது எனக்கு திருமணம் செய்து கொள்ளும் மனநிலை இல்லை. என் கேரியரில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறேன். படத்தில் நடிப்பது தான் இப்போது எனக்கு மகிழ்வைக் கொடுக்கிறது" இவ்வாறு தமன்னா கூறியுள்ளார்.