முதன்முறையாக இணையும் ஜோடி! ஜெயிலர் படத்தில் ரஜினிக்கு ஜோடியாவது இந்த பிரபல நடிகையா??

தமிழ் சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் ரஜினிகாந்த். இவருக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. வயதானாலும் அழகும், எனர்ஜியும் குறையாத ரஜினிகாந்த் ஜெயிலர் என்ற படத்தில் நடிக்கவுள்ளார்.
இந்த படத்தை நெல்சன் திலிப்குமார் இயக்குகிறார் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. ஜெயிலர் படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்த படத்தில் நடிகை ரம்யா கிருஷ்ணன், கன்னட நடிகர் சிவராஜ்குமார் ஆகியோர் முக்கிய ரோலில் நடிக்கிறார்கள்.
இதன் படப்பிடிப்பு வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி துவங்கவுள்ளது. இந்நிலையில் ஜெயிலர் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிக்கப்போவது யார் என கேள்விகள் எழுந்து வந்தது. இந்நிலையில் ஜெயிலர் படத்தில் ரஜினிகாந்திற்கு ஜோடியாக நடிகை தமன்னா நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.