சினிமா

அந்த நடிகர்னா நான் அதுமாதிரியான காட்சியில் கூட நடிக்க தயார்! செம வெறியில் நடிகை தமன்னா! யார் அந்த லக்கி ஹீரோ தெரியுமா?

Summary:

நடிகர் ரித்திக் ரோஷனுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தால் தான் பிகினி உடையில், லிப்லாக் மற்றும் படுக்கையறை காட்சிகளில் நடிக்க கூட தயார் என நடிகை தமன்னா கூறியுள்ளார்.

தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளிலும் ஏராளமான திரைப்படங்களில் நடித்து  முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் தமன்னா. இவர் தமிழ் சினிமாவில் கேடி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி கல்லூரி, படிக்காதவன், பையா,வீரம், சிறுத்தை, தில்லாலங்கடி,சுறா, தேவி, பாகுபலி என பல ஹிட் திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளார்.

நடிகை தமன்னா விஜய், அஜித், சூர்யா, விக்ரம் என பெரும்பாலான டாப் ஹீரோக்களுக்கு ஜோடியாகவும் நடித்துள்ளார்.  அதுமட்டுமின்றி தற்போது வெப்சீரிஸிலும் நடித்து வருகிறார். அதன் படப்பிடிப்புக்கு சென்ற நிலையிலேயே அவர் கொரோனோவால் பாதிக்கப்பட்டு தன்னை தனிமைப்படுத்திக்கொண்டு சிகிச்சை பெற்று அதிலிருந்து மீண்டு வந்துள்ளார். 

இந்த நிலையில் தமன்னா சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், தனக்கு மிகவும் பிடித்த நடிகர் ரித்திக் ரோஷன் எனவும், அவருடன் ஒரு படத்திலாவது நடிக்க தான் ஆசைப்படுவதாகவும் கூறியுள்ளார். மேலும் அவருடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தால் பிகினி உடையில், லிப்லாக் மற்றும் படுக்கையறை காட்சிகளில் நடிக்க கூட தயார் எனவும் கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது .


Advertisement