"அஜித் சார் கிட்ட முடிக்கு டை அடிக்க சொல்லுவேன்" தமன்னாவின் பேட்டியால் கடுப்பான அஜித் ரசிகர்கள்..



Tamanna interview video viral

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக வளர்ந்து வருபவர் நடிகை தமன்னா.  இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் திரைப்படங்கள் நடித்து வருகிறார். தமிழில் முதன் முதலில் 'கேடி' திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார்.

Ajith

முதல் படமே பெரிதளவு வெற்றி பெறவில்லை என்றாலும், தமன்னாவின் நடிப்பு இப்படத்தில் பெரிதும் பாராட்டப்பட்டது. இதன்பின்பு தொடர்ந்து பல வித்தியாசமான கதாபாத்திரங்களை ஏற்று முன்னணி நடிகர்களுடன் இணைந்து திரைப்படங்களில் நடித்து வெற்றி கதாநாயகியாக தமிழ் சினிமாவில் வலம் வருகிறார்.

தற்போது தமன்னா, ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் 'ஜெயிலர்' திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு செய்யப்பட்டு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.

Ajith

இது போன்ற நிலையில், சமீபத்தில் யூ ட்யுப் சேனல் ஒன்றில் பேட்டியில் கலந்து கொண்ட தமன்னாவிடம் தொகுப்பாளர் அஜித்தை பார்த்தால் அவரது வெள்ளையான வயதான தோற்றம் போல் காட்சியளிக்கும் தலைமுடிக்கு டை அடிக்க சொல்வீர்களா என்று கேள்வி கேட்டார் அதற்கு தமன்னா அப்போ என்னால முடியல இப்போ கண்டிப்பா சொல்லுவேன் என்று கூறியிருந்தார். இந்த வீடியோவை பார்த்து அஜித் ரசிகர்கள் கடுப்பாகி கமெண்ட் செய்து வருகின்றனர்.