செம கெத்தான, புதிய அவதாரமெடுக்கும் நடிகை தமன்னா!! ஆச்சரியத்தில் வாயை பிளந்த ரசிகர்கள்!!

செம கெத்தான, புதிய அவதாரமெடுக்கும் நடிகை தமன்னா!! ஆச்சரியத்தில் வாயை பிளந்த ரசிகர்கள்!!


tamanna going to act as kabaddi coach

தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் தமன்னா. கேடி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் இன்று விஜய், அஜித், சூர்யா என தமிழ் சினிமாவின் பல்வேறு முன்னணி பிரபலங்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துவிட்டார்.

நடிகை தமன்னா தமிழ் மட்டும் இல்லாது தெலுங்கு, ஹிந்தி படங்களிலும் பயங்கர பிசியாக உள்ளார் . மேலும் இவர் நடித்த பாகுபலி திரைப்படம் மாபெரும் வெற்றிபெற்றதன்மூலம் அவர் இந்திய அளவில் பெருமளவில் பிரபலமானார்.

tamanna

மேலும் பிரபுதேவாவுடன் இணைந்து தமன்னா நடித்த தேவி படத்தின் முதல் பாகம் மாபெரும் வெற்றிபெற்றதை அடுத்து தேவி 2 படத்திலும் அவர் கதாநாயகியாக நடித்திருந்தார். அதனை தொடர்ந்து அவர் தற்போது, தமிழில் சுந்தர் சி இயக்கத்தில் விஷாலுடன் இணைந்து ஆக்ஷன் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். அப்படத்தில் தமன்னா ராணுவ உளவு அதிகாரியாக நடித்து வருகிறார். மேலும் அவரது நடிப்பில் பெட்ரோமாக்ஸ், சைரா நரசிம்ம ரெட்டி, தட் ஈஸ் மகாலட்சுமி  ஆகிய படங்களும் விரைவில் வெளிவரவுள்ளது.

அதனை தொடர்ந்து தமன்னா தெலுங்கில் பெங்கால் டைகர் என்ற வெற்றி படத்தை உருவாக்கிய சம்பத் நந்தி இயக்கதில் புதிய படத்தில் நடிக்கவுள்ளார்.  கபடி விளையாட்டை மையமாக கொண்டு உருவாகிவரும் இந்த படத்தில் தமன்னா கபடி பயிற்சியாளராக  நடிக்கவுள்ளார். மேலும் அதற்காக அவர் தீவிர பயிற்சி எடுத்து வருவதாகவும் கூறப்படுகிறது. தமன்னாவின் இத்தகைய அழுத்தமான கதாபாத்திரங்கள் ரசிகர்களுக்கு  பெரும் ஆச்சரியம் ஏற்படுத்தியுள்ளது.