"படங்களில் நடிகைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை" தமன்னாவின் சர்ச்சையான பேச்சு..

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் தமன்னா. இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி போன்ற மொழிகளில் திரைப்படங்கள் நடித்து வருகிறார். தமிழில் முதன் முதலில் 'கேடி' திரைப்படத்தில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இப்படம் வெற்றி பெறாவிட்டாலும் தமன்னாவின் நடிப்பு பாராட்டப்பட்டு வந்தது. மேலும் தொடர்ந்து பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து வந்தார்.
தனது நடிப்பாலும், அழகு திறமையாலும் ரசிகர்களை கவர்ந்து தமிழ் சினிமாவில் தனக்கென தனி இடத்தை பிடித்துக் கொண்டார். சமீபத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான 'ஜெயிலர்' திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இது போன்ற நிலையில், தற்போது தமன்னா பத்திரிக்கையாளர் பேட்டியில் "கமர்சியல் திரைப்படங்களில் இனி நடிக்க மாட்டேன். அந்த மாதிரி படங்களில் நடிகைகளுக்கு முக்கியத்துவம் தருவதில்லை" என்று கூறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.