சினிமா

மாமா இறந்துவிட்டார் என கேட்டதும், நடிகர் சுஷாந்தின் 5 வயது மருமகன் என்ன கூறியுள்ளார் பார்த்தீர்களா!

Summary:

Sushanth son in law answer after hearing her uncle dead

தல தோனியின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தில் நடித்ததன் மூலம் இந்தியளவில் பிரபலமானார் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத். இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு மும்பையில் பாந்த்ரா பகுதியில் உள்ள அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். மேலும் அவர் மனஅழுத்தத்தின் காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக  கூறப்படுகிறது. 

34 வயது நிறைந்த சுஷாந்தின் இந்த திடீர் மரணம் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பலரும் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். நடிகர் சுஷாந்திற்கு நான்கு அக்காக்கள். அம்மா இல்லாததால் அவர் அக்காக்களின் செல்லப்பிள்ளையாக இருந்துள்ளார். 

இவரது அக்காக்களில் ஒருவர் ஸ்வேதா சிங் கிர்தி. இவர்  அமெரிக்காவில் வசித்து வருகிறார். அவருக்கு இரு குழந்தைகள் உள்ளனர். இவர் சுஷாந்த் இறப்பிற்கு பின் பலரது உதவியால் அமெரிக்காவிலிருந்து டெல்லி வழியாக மும்பை வந்தார். ஆனால் அவரால் கடைசியாக கூட சுஷாந்தின் முகத்தை பார்க்கமுடியவில்லை.

இந்நிலையில் ஸ்வேதா தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தனது மகன் நிர்வானிடம் மாமு இறந்துவிட்டார் என கூறினேன். அதற்கு அவனோ,அவர் உங்கள் இதயத்தில் வாழ்கிறார் என்று 3 முறை கூறினான். ஒரு 5 வயது குழந்தை இப்படி கூறினால் நாம் எவ்வளவு தைரியமாக இருக்க வேண்டும். அனைவரும் தைரியமாக இருங்கள்... குறிப்பாக சுஷாந்தின் ரசிகர்களுக்கு, அவர் உங்கள் இதயத்தில் என்றும் இருக்கிறார். ஏதாவது செய்து அவனது ஆன்மாவை கஷ்டப்படுத்தாதீர்கள் என்று கூறியுள்ளார்.


Advertisement