சினிமா

அடேங்கப்பா..! சூரரை போற்று படத்திற்கு அமேசான் நிறுவனம் கொடுத்த தொகை எவ்வளவு தெரியுமா..?

Summary:

Suryas Soorarai potru movie on Amazon Prime

நடிகர் சூர்யா நடித்துள்ள சூரரை போற்று திரைப்படம் அமேசான் பிரைம் ஒடிடி தளத்தில் வெளியிட முடிவு செய்திருப்பதாக சூர்யா நேற்று ஒரு நீண்ட அறிக்கையை வெளியிட்டார்.

கொரோனா ஊரடங்கு காரணமாக திரையரங்குகள் மூட்டப்பட்டு இருக்கும்நிலையில் பல்வேறு திரைப்படங்கள் அனைத்து வேலைகளும் முடிந்து திரையில் வெளிவருவதற்காக காத்திருக்கிறது. அந்த வகையில் சூர்யா நடிப்பில் உருவாகியிருக்கும் சூரரை போற்று படமும் கொரோனா ஊரடங்கு காரணமாக காத்திருப்பு பட்டியலில் உள்ளது.

இந்நிலையில் சூரரை போற்று திரைப்படத்தை அமேசான் ஒடிடி தளத்தில்  வெளியிட இருப்பதாக சூர்யா அறிவித்ததை தொடர்ந்து சூர்யா மீது திரையரங்க உரிமையாளர்கள் மற்றும் விநியோகிஸ்தர்கள் கடுமையான விமர்சனத்தை முன்வைத்தனர். ஒருபுறம் எதிர்ப்புகள் இருந்தாலும் மறுபுறம் சூர்யாவுக்கு ஆதரவு குரல்களும் எழுந்தது.

இந்நிலையில் சூரரை போற்று திரைப்படம் அக்டோபர் 30-ஆம் தேதி அமேசான் ஒடிடி தளத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் 60 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான இந்த படத்தை அமேசான் நிறுவனம் அதே 60 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

அதுபோக, இந்த படத்தின் சாட்டிலைட் உரிமம், ஹிந்தி டப்பிங் உரிமம் ஆகியவை சுமார் 40 கோடிக்கு விலைபோனதாகவும், மொத்தத்தில் இந்த படம் சுமார் 100 கோடி ரூபாய்க்கு வியாபாரம் ஆகியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.


Advertisement