சார்.. பாகுபலி ரேஞ்சுக்கு ஒரு கதை இருக்கு.. சூர்யாவுக்கு கதை சொல்லி அசத்திய பிரபல இயக்குனர்..



Surya vasandha balan joins in new movie

நடிகர் சூர்யாவிடம் வரலாற்று கதை ஒன்றை இயக்குனர் வசந்தபாலன் கூறியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

சூரரைப்போற்று படத்திற்கு பிறகு சூர்யா தற்போது பாண்டிராஜ் இயக்கத்தில் நடித்துவருகிறார். இந்த படத்தை அடுத்து சூர்யா வெற்றி மாறன் இயக்கத்தில் வாடிவாசல் என்ற படத்தில் நடிக்க உள்ளார். இந்நிலையில் இயக்குனர் வசந்தபாலன் அவர்கள் நடிகர் சூர்யாவிடம் கதை கூறியிருப்பதாக கூறப்படுகிறது.

surya

பாகுபலி போல் மிகப்பெரிய வரலாற்று கதை ஒன்றை வசந்தபாலன் நடிகர் சூர்யாவிடம் கூறியிருப்பதாகவும், அந்த கதை சூர்யாவுக்கு மிகவும் பிடித்துப்போய்விட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும் வெற்றி மாறன் படத்தை அடுத்து சூர்யா - வசந்த பாலம் இருவரும் இணைவார்கள் என்றும் கூறப்படுகிறது.

இயக்குனர் வசந்தபாலன் தற்போது நடிகர் ஜி.வி பிரகாஷை வைத்து ஜெயில் என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த பரம் விரைவில் திரைக்கு வர உள்ளது. முன்னதாக ஆல்பம், வெயில், அங்காடித் தெரு, அரவான், காவியத்தலைவன் ஆகிய படங்களை இயக்கி மக்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றுள்ளார் இயக்குனர் வசந்தபாலன்.

இதனால் சூர்யாவுடன் இயக்குனர் வசந்தபாலன் இணைந்தால் படம் நன்றாக இருக்கும் என கமெண்ட் செய்துவருகின்றனர் சூர்யா ரசிகர்கள்..