சினிமா

ரசிகரின் 3 வருஷ ஏக்கத்தை ஒரு நொடியில் போக்கிய நடிகர் சூர்யா! என்ன செய்துள்ளார் பார்த்தீர்களா!

Summary:

நடிகர் சூர்யா தனது ரசிகரின் 3 வருட கனவை நிறைவேற்றும் வகையில், அவரது டுவீட்டுக்கு பதிலளித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் நேருக்கு  நேர் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமாகி சாக்லேட் பாயாக, ஆக்சன் ஹீரோவாக ஏராளமான ஹிட் திரைப்படங்களில் நடித்து தற்போது முன்னணி நடிகராக கொடிகட்டி பறப்பவர் நடிகர் சூர்யா. இவருக்கென ஏராளமான ரசிகர்கள் கூட்டமே உள்ளது. 

இந்நிலையில் சூர்யா தற்போது சுதா கொங்கரா இயக்கத்தில் சூரரைப்போற்று என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படம் தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 12 ஓடிடிதளத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.

இந்தநிலையில் ரசிகர் ஒருவர் டுவிட்டர் பக்கத்தில், அண்ணா உங்களுக்காக இந்த டுவிட்டரில் மூன்று வருஷமாக இருந்தாலும் உங்ககிட்ட இருந்து ஒரு லைக் கூட வாங்க முடியலை என வருத்தத்துடன் பதிவிட்டுள்ளார். இதனை கண்ட நடிகர் சூர்யா உடனே அவரது பதிவை ரீட்வீட் செய்து உங்களது அன்பிற்கு நன்றி என தெரிவித்துள்ளார்.

    


Advertisement