பிரபாஸின் ஸ்பிரிட் படத்தில் இருந்து விலகிய நடிகை தீபிகா படுகோனே.! என்ன காரணம்? ரசிகர்கள் ஷாக்!!
கொரோனா பாதித்த நடிகர் சூர்யாவின் தற்போதைய நிலை.!

தமிழ் சினிமாவில் ஏராளமான ஹிட் திரைப்படங்களில் நடித்து தற்போது முன்னணி நடிகராக இருப்பவர் சூர்யா. இவருக்கென ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. சூர்யா இறுதியாக சுதா கொங்கரா இயக்கத்தில் சூரரைப்போற்று திரைப்படத்தில் நடித்திருந்தார். இப்படம் ஓடிடி தளத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது.
நடிகர் சூர்யா அடுத்ததாக சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கும் சூர்யா 4௦ என்ற படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார். அதனை தொடர்ந்து அவர் கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் என்ற படத்தில் நடிக்கவுள்ளார். இதன் படப்பிடிப்புகள் விரைவில் நடைபெறும் என்று கூறப்படுகிறது. இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.
’கொரோனா’ பாதிப்பு ஏற்பட்டு, சிகிச்சை பெற்று நலமுடன் இருக்கிறேன். வாழ்க்கை இன்னும் இயல்பு நிலைக்கு திரும்பவில்லை என்பதை அனைவரும் உணர்வோம். அச்சத்துடன் முடங்கிவிட முடியாது. அதேநேரம் பாதுகாப்பும், கவனமும் அவசியம். அர்ப்பணிப்புடன் துணைநிற்கும் மருத்துவர்களுக்கு அன்பும், நன்றிகளும்.
— Suriya Sivakumar (@Suriya_offl) February 7, 2021
மேலும் தயாரிப்பாளரான சூர்யா தொடர்ந்து பல படங்களை இயற்றி வருகிறார். இந்நிலையில் சூர்யா தனக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு, சிகிச்சை பெற்று தற்போது நலமுடன் இருப்பதாக டுவிட்டரில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் டுவிட்டர் பக்கத்தில், கொரோனா பாதிப்பு ஏற்பட்டு, சிகிச்சை பெற்று நலமுடன் இருக்கிறேன். வாழ்க்கை இன்னும் இயல்பு நிலைக்கு திரும்பவில்லை என்பதை அனைவரும் உணர்வோம். அச்சத்துடன் முடங்கிவிட முடியாது. அதேநேரம் பாதுகாப்பும், கவனமும் அவசியம். அர்ப்பணிப்புடன் துணைநிற்கும் மருத்துவர்களுக்கு அன்பும், நன்றிகளும் என பதிவிட்டுள்ளார்.