முதன்முறையாக வெப்சீரிஸில் நடிக்கவுள்ள நடிகர் சூர்யா! இயக்குனராக அறிமுகமாகும் பிரபல நடிகர்கள்! வெளியான சுவாரஸ்ய தகவல்கள்!

முதன்முறையாக வெப்சீரிஸில் நடிக்கவுள்ள நடிகர் சூர்யா! இயக்குனராக அறிமுகமாகும் பிரபல நடிகர்கள்! வெளியான சுவாரஸ்ய தகவல்கள்!


surya-may-act-in-webseries-first-time

தமிழ் சினிமாவில் ஏராளமான வெற்றி திரைப்படங்களில் நடித்து தற்போது முன்னணி நடிகர்களில் ஒருவராக கொடிகட்டி பறப்பவர் நடிகர் சூர்யா. அவரது நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் NKG. அதனைத் தொடர்ந்து அவர் பெண் இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவான சூரரைப்போற்று என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். ஆனால் கொரோனா அசச்சுறுத்தல்  காரணமாக படம் தற்போது  வெளியாகவில்லை.

இப்படத்தை தொடர்ந்து சூர்யா ஹரி இயக்கத்தில் அருவா என்ற படத்திலும், வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் என்ற படத்திலும் நடிக்க உள்ளார். மேலும் கொரோனா பிரச்சினைகள் முடிவுக்கு வந்த பிறகு படப்பிடிப்புகள் தொடங்கலாம் என கூறப்படுகிறது.

surya

இந்த நிலையில் நடிகர் சூர்யா முதன்முறையாக வெப்சீரிஸ் ஒன்றில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் ஒன்பது எபிசோட்டாக உருவாக்கப்படவுள்ள இந்த பெப்சீரிஸை ஒன்பது இயக்குனர்கள் இயக்க உள்ளனர் எனவும் கூறப்படுகிறது.

அந்த இயக்குனர்களில் ஒருவர் மணிரத்னம் எனவும், நடிகர்கள்  சித்தார்த் மற்றும் அரவிந்த்சாமி ஆகியோரும் இந்த வெப்சீரிஸ்  மூலம் இயக்குனராக உள்ளனர்  எனவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.