சினிமா

நேர்கொண்ட பார்வை சாதனை.! உற்சாகத்தில் அஜித்திற்கு சர்ப்ரைஸ் கிப்ட் அனுப்பிய பிரபல நடிகை!! புகைப்படம் இதோ!!

Summary:

surya jothika send flowers toajith

பாலிவுட்டில் அமிதாப்பச்சன், டாப்ஸி உள்ளிட்டோரின் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற படம் பிங்க். இந்தப் படத்தை இயக்குனர் வினோத் நேர்கொண்ட பார்வை என்ற பெயரில் ரீமேக் செய்துள்ளார்.

மேலும் இந்தப் படத்தில் அஜித் வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவரை எதிர்த்து வாதிடும் வழக்கறிஞராக ரங்கராஜ் பாண்டே நடித்துள்ளார். படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவுக்கு என்ட்ரி  கொடுத்துள்ளார் வித்யாபாலன். மேலும் ஷ்ரத்தா ஸ்ரீநாத், அபிராமி, ஆதிக் ரவிச்சந்திரன், டெல்லி கணேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

சூர்யா JOTHIKA க்கான பட முடிவு

இந்நிலையில் நேர்கொண்ட பார்வை திரைப்படம் ஆகஸ்ட் 8 உலகம் முழுவதும் வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்றது. மேலும் வசூல் சாதனையும் குவிகிறது.

இந்நிலையில் நடிகர் சூர்யா மற்றும் ஜோதிகா இருவரும் பெண்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த இந்த படத்தை முதல் நாளே சென்று பார்த்துள்ளனர். மேலும் படம் பார்த்து சந்தோஷமடைந்த சூர்யா, இயக்குனர் வினோத் மற்றும் நடிகர் அஜித்திற்கு வாழ்த்துக்கள் கூறியுள்ளார். அதுமட்டுமின்றி அஜித்திற்கு வாழ்த்து மடலுடன் 
 அழகிய பூங்கொத்தையும் சர்பிரைஸ் கிப்டாக அனுப்பியுள்ளனர்.  அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.


Advertisement