மறைந்த நடிகர் விவேக்கிற்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்திய முக்கிய பிரபலங்கள்! வைரலாகும் புகைப்படங்கள்!!

மறைந்த நடிகர் விவேக்கிற்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்திய முக்கிய பிரபலங்கள்! வைரலாகும் புகைப்படங்கள்!!



surya-jothika-join-with-vivek-funeral

தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து ஏராளமான திரைப்படங்களில் தனது காமெடியால் அனைவரையும் சிரிக்க வைத்தது மட்டுமின்றி சிந்திக்க வைத்து முன்னணி நகைச்சுவை நடிகராக விளங்கியவர் விவேக். அவர் நேற்று காலை மாரடைப்பு ஏற்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வந்தார்.

அவருக்கு ஆஞ்சியோ செய்தும் எந்த பலனும் இல்லாதநிலையில் எக்மோ கருவி பொருத்தப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் இன்று காலை 4.35 மணியளவில் சிகிச்சை பலனின்றி விவேக் காலமானார். இவரது மறைவு திரையுலக பிரபலங்கள்,ரசிகர்கள் என பலருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

vivek

இந்நிலையில் சின்ன கலைவாணர் விவேக்கின் உடல் விருகம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பிரபல நடிகரான சூர்யா, அவரது மனைவி ஜோதிகா மற்றும் கார்த்தி ஆகியோர் நேரில் அஞ்சலி மறைந்த நடிகர் விவேக்கின் உடலுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

vivek