நான் அதற்காக படங்கள் பண்ணலை! அடுத்த பிளான் இதுதான்! நடிகர் சூர்யா வெளியிட்ட சூப்பர் தகவல்!

நான் அதற்காக படங்கள் பண்ணலை! அடுத்த பிளான் இதுதான்! நடிகர் சூர்யா வெளியிட்ட சூப்பர் தகவல்!


surya-imterview-after-soorarai-potru-movie

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூர்யாவின் 38வது திரைப்படம் சூரரை போற்று. சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகும் இப்படம் இந்தியாவில் முதல் பட்ஜெட் விமானப் பயணத்தை உருவாக்கிய ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையை மையப்படுத்தி  உருவாக்கப்பட்டுள்ளது. இப்படம் கொரோனோ ஊரடங்கால்  தியேட்டரில் ரிலீஸ் செய்யப்பட முடியாத நிலையில், வருகிற நவம்பர் 12-ந் தேதி ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.

இப்படத்தை தொடர்ந்து சூர்யா மணிரத்னம் தயாரிப்பில் உருவாகும் நவரசா அந்தாலஜி படத்தில் நடிக்கவுள்ளார். பின்னர் பாண்டிராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் படத்திலும் அதற்குப் பின்னரே வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் படத்தில் நடிக்க திட்டமிட்டுள்ளார்.

surya

இந்நிலையில் தற்போது சூர்யா அளித்துள்ள பேட்டியில், நான் புகழுக்காகவோ நாமும் சினிமாவில் இருக்கிறோம் என்பதை காட்டிக் கொள்வதற்காகவோ படங்களில் நடிக்கவில்லை. நாம் நடிக்கும் ஒவ்வொரு படமும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என விரும்புகிறேன். மேலும் நாம் யாரை சந்திக்கிறோம், அவர்கள் நம்மை என்ன செய்ய வைக்கிறார்கள் என்பதுதான் முக்கியம். 

என்னை பொறுத்தவரை  வாழ்க்கையில் நடந்த உணர்வுப்பூர்வமான சம்பவங்கள் இருந்தால் தைரியமாக நடிக்க தொடங்கி விடுவேன். நான் நினைத்து பார்க்காத  இடம் சினிமாவில் கிடைத்துள்ளது. நல்ல வாய்ப்பு வரும்போது அதற்காக கடின உழைப்பை போட வேண்டுமென நினைக்கிறேன் எனக் கூறியுள்ளார்.