சினிமா

பிக்பாஸ் லாஸ்லியா மற்றும் தர்ஷன் படத்திற்காக நடிகர் சூர்யா செய்யும் அசத்தலான விஷயம்! அதுவும் எப்போ தெரியுமா??

Summary:

பிக்பாஸ் சீசன் 3 இல் கலந்து கொண்டதன் மூலம் பெரும் அளவில் பிரபலமான மற்றும் லாஸ்யா இருவரும்

பிக்பாஸ் சீசன் 3ல் கலந்து கொண்டதன் மூலம் பெருமளவில் பிரபலமான தர்ஷன் மற்றும் லாஸ்லியா இருவரும் இணைந்து நடிக்கும் கூகுள் குட்டப்பா படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் சூர்யா வெளியிட உள்ளார்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்ற பிக்பாஸ் சீசன் 3ல் கலந்து கொண்டதன் மூலம் மக்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர்கள் லாஸ்லியா மற்றும் தர்ஷன். இவர்கள் இருவரும் ஒன்றாக இணைந்து நடிக்கும் திரைப்படம் கூகுள் குட்டப்பா. 

இந்தப் படம் மலையாளத்தில் சுரஜ் வெஞ்சிராமூடு நடிப்பில் வெளிவந்து வெற்றி பெற்ற ' ஆண்ட்ராய்டு குஞ்சப்பன் வெர்ஷன் 5.25' படத்தின் தமிழ் ரீமேக் ஆகும். கே.எஸ் ரவிக்குமார் இப்படத்தை தயாரிக்கிறார். மேலும் அவரது உதவி இயக்குனர்களான சபரி மற்றும் சரவணன்  ஆகியோர் இந்த படத்தை இயக்குகின்றனர்.

இந்நிலையில் கூகுள் குட்டப்பா படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் சூர்யா இன்று மாலை 6 மணிக்கு வெளியிட உள்ளார். இதனை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை கிளம்பியுள்ளது.


Advertisement