சினிமா

ஜோதிகா சர்ச்சை அடங்குவதற்குள் மற்றொரு வீடியோ..! குலதெய்வ கோவிலில் வழிபாடு நடத்தும் சூர்யா ஜோதிகா..!! வைரலாகும் வீடியோ இதோ..!

Summary:

Surya and Jodhika temple visit video goes viral

கடந்த சில நாட்களாக மிகவும் வைரலாக பேசப்பட்ட சம்பவங்களில் ஓன்று நடிகை ஜோதிகா விருது வழங்கும் விழா ஒன்றில் கோவில்கள் பற்றி பேசியதுதான்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்து இன்று நடிகர் சிவகுமாருக்கு மருமகளாக, நடிகர் சூர்யாவின் மனைவியாக இருப்பவர் நடிகை ஜோதிகா. இந்நிலையில், சமீபத்தில் விருது வழங்கும் விழா ஒன்றில் பேசிய ஜோதிகா கோவில்களுக்கு நன்கொடையாக தரும் பணத்தை பள்ளிகளுக்கும், மருத்துவமனைகளுக்கும் கொடுக்கலாம் என கூறினார்.

ஜோதிகா கூறியதை பலர் ஏற்றுக்கொண்டாலும் அவர் கூறிய கருத்துக்களுக்கு பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்புகளும் கிளம்பியது. அன்றில் இருந்து சூர்யா குடும்பம் சம்மந்தமான வீடியோக்களை தேடி கண்டுபிடித்து இணையத்தில் வைரலாகிவருகின்றனர் ரசிகர்கள்.

அந்தவகையில் நடிகர் சூர்யாவின் குடும்பம்  குலதெய்வ கோவிலில் வழிபாடு செய்த வீடியோ, தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகிவருகிறது. கடந்த டிசம்பர் மாதம், ஈரோட்டில் உள்ள குலதெய்வ வழிபாட்டிற்கு சென்றபோது இந்த வீடியோ எடுக்கப்பட்டுள்ளது.


Advertisement