சினிமா

சூர்யா படம் குறித்து தீயாக பரவிய தகவல்.. ஒரே ட்விட்டில் முற்றுப்புள்ளி வைத்த இயக்குனர்..

Summary:

சூர்யா படம் குறித்து வதந்திகளை நம்பவேண்டாம் என இயக்குனர் பாண்டிராஜ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சூர்யா படம் குறித்து வதந்திகளை நம்பவேண்டாம் என இயக்குனர் பாண்டிராஜ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சுதா கொங்கரா - சூர்யா கூட்டணியில் உருவான சூரரைப்போற்று திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. சூரரைப்போற்று திரைப்படத்தை அடுத்து சூர்யா வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் என்ற படத்தில் நடிக்க உள்ளார். அதை தொடர்ந்து சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா 40 படத்தில் நடிக்க உள்ளார் சூர்யா.

இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடிகை ரஷ்மிக்கா மந்தனா நடிக்க இருப்பதாக கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் ஒரு தகவல் வைரலாகிவருகிறது. மேலும் டாக்டர் படதின் ஹீரோயின் பிரியங்கா அருள் மோகன் பெயரும் ஹீரோயின் பட்டியலில் இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில் படத்தின் நாயகிகள் தொடர்பான பேச்சு சமூக வலைத்தளங்களில் தீயாக பரவி வந்த நிலையில் படத்தின் இயக்குநர் பாண்டிராஜ் இதுகுறித்து சூர்யா ரசிகர்களுக்கு வேண்டுகோள் வைத்து ட்வீட் செய்துள்ளார்.

அந்த பதிவில், "சூர்யா 40 படம் குறித்த உங்களது ஆர்வம் எங்களுக்கு புரிகிறது. தயவு செய்து வதந்திகளை நம்பாதீர்கள். படத்தில் நடிக்கும் நடிகர்கள் குறித்த அறிவிப்பை தயாரிப்பு நிறுவனம் விரைவில் வெளியிடும். உங்களுக்கு சிறந்ததைக் கொடுக்க, நாங்கள் கடுமையாக உழைத்து வருகிறோம்” என்று பாண்டிராஜ் கூறியுள்ளார்.


Advertisement