சினிமா

நடிகர் சூர்யா பர்த்டே ஸ்பெஷல்.. அடுத்தடுத்து காத்திருந்த மிரட்டலான ட்ரீட்! இன்ப அதிர்ச்சியில் ரசிகர்கள்!!

Summary:

தமிழ் சினிமாவில் ஏராளமான மாஸ் சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் மாப

தமிழ் சினிமாவில் ஏராளமான மாஸ் சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பைப் பெற்று முன்னணி நட்சத்திரமாக கொடிகட்டி பறப்பவர் நடிகர் சூர்யா. இவருக்கென ஏராளமான ரசிகர்கள் கூட்டமே உள்ளது. மேலும் இவரது படங்கள் மற்றும் இவர் குறித்த தகவலுக்காக ரசிகர்கள் வெறித்தனமாக காத்திருப்பர்.

இந்நிலையில் நடிகர் சூர்யா இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் வாழ்த்துக் கூறி வருகின்றனர். மேலும் சூர்யாவின் பிறந்த நாளை முன்னிட்டு நேற்று பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துவரும் 40வது படமான எதற்கும் துணிந்தவன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. மேலும் அடுத்தடுத்தாக அதன் இரண்டாவது, மூன்றாவது லுக் புகைப்படமும் வெளியானது.

இந்த நிலையில் ரசிகர்களுக்கு மற்றொரு விருந்தாக சூர்யாவின் 39வது படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் தற்போது வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் 
 வைரலாகி வருகிறது. இந்த படத்திற்கு ஜெய்பீம் என பெயரிடப்பட்டுள்ளது.  இப்படத்தை 2டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரிப்பில் தா.செ.ஞானவேல் இயக்கியுள்ளார் . மேலும் ரெஜினா விஜயன், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலரும் இப்படத்தில் நடிக்கின்றனர்.

    


Advertisement