சினிமா

சூர்யாவின் சூரரை போற்றும் படத்தின் ரன்னிங் டைம் எவ்வளவு தெரியுமா? வெளியான புதிய தகவல்.!

Summary:

Surarai poirrum runing time

சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் சூரரைப் போற்று. இந்த திரைப்படத்தில் அபர்ணா, மோகன் பாபு, ஊர்வசி, கருணாஸ் உள்ளிட்ட பலரும் இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும் ஜிவி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்தியாவில் முதல் பட்ஜெட் விமானப் பயணத்தை உருவாக்கிய ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையை மையப்படுத்தி இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது. 

படப்பிடிப்புகள் அனைத்தும் முடிவடைந்து திரைக்கு வரவிருந்த நிலையில் கொரோனா ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் படம் வெளியாகாமல் இருந்தது. இந்நிலையில் அப்படத்தை அக்டோபர் 30-ந்தேதி அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியிடுவதாக சூர்யா அறிவித்துள்ளார்.

இந்நிலையில் சூரரை போற்றும் படத்தின் முழு ரன்னிங் டைம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதாவது வரும் அக்டோபர் 30 ஆம் தேதி ஓடிடியில் வெளியாகவுள்ள இப்படத்தின் ரன்னிங் டைம் 2 மணி நேரம் 33 நிமிடங்கள் ஆகும். 


Advertisement