முதல் படத்தில் விஜய் நடிக்கும்போது ரஜினி கூறிய அந்த ஒருவார்த்தை! என்ன சொன்னாராம் தெரியுமா?

முதல் படத்தில் விஜய் நடிக்கும்போது ரஜினி கூறிய அந்த ஒருவார்த்தை! என்ன சொன்னாராம் தெரியுமா?


super-star-rajini-advice-to-thalapathi-vijay

தமிழ் சினிமா என்பதை தாண்டி, இந்திய அளவில் பிரபலமானவர்கள் சூப்பர் ஸ்டார் ரஜினி மற்றும் தளபதி விஜய். இவர்கள் இருவருக்கும் ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். பேட்ட படத்தில் நடித்துள்ள சூப்பர் ஸ்டார் அடுத்தது AR முருகதாஸ் படத்தில் நடிக்க உள்ளார்.

சர்க்கார் படத்தில் கடைசியாக நடித்த தளபதி, தற்போது அட்லீ இயக்கத்தில் தளபதி 63 படத்தில் கூட்டணி சேர்ந்துள்ளார். சூப்பர் ஸ்டார் இடத்தை விஜய் ஏற்கனவே பிடித்துவிட்டதாக சமூக வலைத்தளங்களில் பரவலான பேச்சு உள்ளது.

vijay

இந்நிலையில் விஜய் நடித்த முதல் படமான நாளைய தீர்ப்பு படத்தை சூப்பர் ஸ்டார் ரஜினி தொடங்கி வைத்ததாகவும், படம் தொடங்கும் முன் சூப்பர் ஸ்டார் ரஜினி விஜய்க்கு  ஒரு அறிவுரை கூறியதாகவும் ஒரு செய்து சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகிறது.

அதில், விஜய்யின் முதல் படம் நாளைய தீர்ப்பு படத்தின் ஷூட்டிங்கை துவங்கி வைத்த ரஜினி விஜய்க்கு முதலில் வாழ்த்து கூறினாராம். “ஆண்டவன் துணை உனக்கு இருக்கு. உன் தந்தையின் துணை இருக்கு. இன்னும் கடினமாக உழை. இன்னும் பெரிய அளவில் முன்னுக்கு வருவே” என கூறினாராம் ரஜினி.