சினிமா

அதுதான் எனக்கு சொர்க்கத்தில் கிடைத்த பரிசு என கூறி சன்னி லியோன் வெளியிட்ட புகைப்படம்!.

Summary:

அதுதான் எனக்கு சொர்க்கத்தில் கிடைத்த பரிசு என கூறி சன்னி லியோன் வெளியிட்ட புகைப்படம்!.


பாலிவுட் நடிகை சன்னி லியோன் தற்போது இந்தியாவின் முக்கிய நட்சத்திரமாக திகழ்ந்து வருகிறார். இந்தியாவில் மட்டுமல்ல உலகம் முழுவதும் இவருக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. 

சன்னி லியோன் குழந்தைகள் மீது அதிகம் ஆர்வம் கொண்டவர். இவர் குழந்தை பெற்றுக்கொள்ளாமல் குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வருகிறார். 


சமீபத்தில் அவர் கணவருடன் விநாயகர் சதுர்த்தி விழாவை  மகிழ்ச்சியுடன் கொண்டாடினார். அப்போது சன்னிலியோனின் வளர்ப்பு மகள் நிஷா கவூர் பெற்றோருக்கு ஆசீர்வாதம் அளிப்பது போன்று எடுக்கப்பட்ட புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. 

 அந்த புகைப்படத்தை ட்விட்டரில் பதிவிட்டுள்ள சன்னி லியோன், தனது மகள் நிஷா கவூர் சொர்க்கத்திலிருந்த கிடைத்த பரிசு என பெருமிதத்தோடு தெரிவித்துள்ளார். இந்த விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்திற்கு அழைத்த கரெஞ்ஜித் கவூர் தயாரிப்பாளர் கிஷோர் அரோரா குடும்பத்திற்கு நன்றி தெரிவித்தும் அவர் ட்வீட் செய்துள்ளார். 

அவர் டிவிட்டர் செய்த பதிவும், அவர் வெளியிட்ட புகைப்படமும் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. அதற்கு அவரது ரசிகர்களும் அவர்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
 


Advertisement