"எனக்கு ஏற்றது போல் ஒருவர் எப்போதும் கிடைக்க மாட்டார், நான் தனியாகத்தான் இருக்கப் போகிறேன்" நடிகை ஸ்ருதிராஜ் புலம்பல்.?
"எனக்கு ஏற்றது போல் ஒருவர் எப்போதும் கிடைக்க மாட்டார், நான் தனியாகத்தான் இருக்கப் போகிறேன்" நடிகை ஸ்ருதிராஜ் புலம்பல்.?

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'தென்றல்' சீரியலின் மூலம் பிரபலமானவர் நடிகை ஸ்ருதி ராஜ். இவர் விஜய் தொலைக்காட்சியில் 'ஆபீஸ்' என்ற சீரியலிலும் நடித்திருந்தார்.
இந்த சீரியல்களின் மூலம் மக்களின் மனதை கவர்ந்து தனக்கென தனி ரசிகர் கூட்டத்தை பிடித்தார். இவரின் நடிப்பிற்காகவே இந்த சீரியல்களை பார்ப்பவர்கள் உண்டு என்றும் சொல்லலாம்.
இதுபோன்ற நிலையில், தொடர்ந்து பல சீரியல்களில் நடித்து வரும் சுருதி ராஜ், தற்போது திரைப்படங்களிலும் நடிக்க ஆரம்பித்திருக்கிறார். இவர் சமீபத்தில் கலந்து கொண்ட பேட்டியில் தொகுப்பாளர் எப்போது திருமணம் செய்யப் போகிறீர்கள் என்ற கேள்விக்கு புலம்பலாக பதில் அளித்திருக்கிறார் சுருதி ராஜ்.
அவர் கூறியதாவது, "நான் எனக்காக எதை தேர்ந்தெடுத்தாலும் அது சரியாக இருக்காது. என் பெற்றோர்கள் தேர்ந்தெடுத்து எனக்கானவராக இருந்தால் கண்டிப்பாக திருமணம் செய்து கொள்வேன். அது நடக்கிறப்ப நடக்கட்டும் என்று கூறிய வீடியோ தற்போது இணையத்தில் பரவலாக இருக்கிறது.