சினிமா

பொங்கலுக்கு சன் டிவியில் என்ன படம் தெரியுமா? டிஆர்பி எகிற போகுது! 4 மாஸ் திரைப்படங்கள்..

Summary:

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சன் தொலைக்காட்சி புது படங்களை ஒளிபரப்பவுள்ளது.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சன் தொலைக்காட்சி புது படங்களை ஒளிபரப்பவுள்ளது.

பொதுவாக பண்டிகை நாட்கள் என்றாலே அனைத்து தொலைக்காட்சிகளிலும் புது படம் கட்டாயம் இருக்கும். அதுவும் சன் தொலைக்காட்சி என்றால் சொல்லவே தேவை இல்லை. நிச்சயம் புதுப்படமாகத்தான் இருக்கும். அதுவும் பெரிய வெற்றி படமாகத்தான் இருக்கும்.

அந்த வகையில் வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தொடர்ந்து நான்கு நாட்களுக்கு பெரிய வெற்றிப்படங்களையும், திரைக்கே வராத திரைப்படத்தை முதல் முறையாக தொலைக்காட்சியிலும் ஒளிபரப்பவுள்ளது சன் தொலைக்காட்சி.

அந்த பட்டியலில், வரும் வியாழன் அன்று மாலை 6.30 மணிக்கு நடிகர் சூர்யா நடிப்பில் சமீபத்தில் வெளியான சூரரைப்போற்று திரைப்படம் ஒளிபரப்பாகிறது. இதனை அடுத்து வரும் வெள்ளி அன்று மாலை 6.30 மணிக்கு நடிகர் விக்ரம் பிரபு, லட்சுமி மேனன் நடிப்பில் உருவாகி, திரைக்கே வராமல், நேரடியாக சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது புலிக்குட்டி பாண்டி திரைப்படம்.

இதனை அடுத்து வரும் சனிக்கிழமை மாலை 6.30 மணிக்கு நடிகர் ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவான காஞ்சனா 3 திரைப்படமும், வரும் ஞாயிறு அன்று தல அஜித், லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில் உருவான மெகாஹிட் திரைப்படமான விஸ்வாசம் படத்தை ஒளிபரப்புகிறது சன் டிவி.


Advertisement