கல்யாணம் எப்போ?? குட் நியூஸ் சொன்ன பிக்பாஸ் அருண்.! ரசிகர்கள் வாழ்த்து!!
சர்க்கார் படத்தை சன் பிக்சர்ஸ் கைவிட காரணம் என்ன?? அரசியல் பின்னணியாக இருக்குமோ என சந்தேகம் !!
துப்பாக்கி, கத்தி போன்ற மெகா ஹிட் திரைப்படங்களைத் தொடர்ந்து தற்போது மீண்டும் இயக்குனர் முருகதாஸ் இயக்கத்தில் சர்க்கார் என்ற படத்தில் நடித்து வருகிறார் நடிகர் விஜய்.
மேலும், சன் பிக்சர்ஸ் பிரம்மாண்டமாக தயாரிக்கும் இந்த படத்தில் விஜய் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். முக்கிய கதாபாத்திரங்களில் வரலட்சுமி, பழ.கருப்பையா, ராதாரவி, யோகிபாபு ஆகியோர் நடிக்கின்றனர். சில வாரங்களுக்கு முன்பு இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. இந்த போஸ்டரில், விஜய் வாயில் சிகரெட்டை வைத்திருப்பது போல் இருந்ததால் பல்வேறு சர்ச்சைகள் எழுந்தது.
இதையடுத்து, படம் தீபாவளிக்குப் ரிலீஸ் என அறிவிக்கப்பட்டுள்ளதால், படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்த படத்தின் வியாபாரம் தொடங்கிவிட்டதாகவும், இந்த படத்தை உலகம் முழுவதும் ரிலீஸ் செய்வதற்கான உரிமையை ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் ரூ.100 கோடி விலைக்கு பெற்றுவிட்டதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.
சாதாரண படங்களை கூட தனது பிரமாண்டமான புரமோஷன் மூலம் வெற்றியடைய வைத்து விடும் நிறுவனம் என்ற பெயரை பெற்ற சன் பிக்சர்ஸ் நிறுவனம், விஜய் நடித்த படத்திற்கு செய்யும் புரமோஷன் குறித்து கேட்கவே வேண்டாம். அப்படி இருக்கும்பட்சத்தில் திடீரென படத்தை ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்திற்கு விற்க வேண்டிய காரணம் என்ன என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்த படம் முழுக்க முழுக்க அரசியல் பின்னணியை வைத்து எடுத்துள்ளதால், படத்தில் ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என அனைத்து கட்சிகளையும் தாக்கும் விதத்தில் வசனங்கள் இருப்பதாகவும், தேர்தல் நெருங்கும் நேரத்தில் இந்த படத்தை சொந்தமாக ரிலீஸ் செய்வதன்மூலம் திமுகவுக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருப்பதால் இந்த படத்தின் ரிலீஸ் உரிமையை மொத்தமாக ஸ்ரீதேனாண்டாள் நிறுவனத்திற்கு விற்பனை செய்துவிட்டதாக தகவல் தெரிகிறது.