ப்பா.. கொழுகொழுவென இருந்த சுஜாவா இது! இப்போ வேற லெவலில் மாறிட்டாரே! செம ஷாக்கில் நெட்டிசன்கள்!!

ப்பா.. கொழுகொழுவென இருந்த சுஜாவா இது! இப்போ வேற லெவலில் மாறிட்டாரே! செம ஷாக்கில் நெட்டிசன்கள்!!


suja-latest-photoshoot-viral

தமிழ் சினிமாவில் ஆரம்பத்தில் பல படங்களில் கவர்ச்சி நாயகியாக நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை சுஜா வருணி. இவர் தமிழில் மிளகாய், பென்சில், கிடாரி உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். அதனைத் தொடர்ந்து அவர் பிக்பாஸ் சீசன் 2ல் வைல்ட் கார்டு என்ட்ரியின் மூலம் போட்டியாளராக களமிறங்கினார்.

பிக்பாஸ் போட்டியில் சுஜா தனது விடா முயற்சியினால் அனைத்து டாஸ்க்குகளையும் சிறப்பாக செய்து சக போட்டியாளர்களுடன்  தீவிரமாகப் போராடினார். பின்னர் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய அவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரனும், ராம்குமாரின் மகனுமான சிவகுமாரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு அத்வைத் என்ற மகன் உள்ளார். திருமணத்திற்கு பிறகு சுஜா தனது கணவன் மற்றும் மகனை கவனிப்பதிலேயே மிகுந்த ஆர்வம் காட்டி வந்தார்.

அந்த நிலையில் தற்போது அவருக்கு சில பட வாய்ப்புகள் வந்துள்ளதாக கூறப்படுகிறது. குழந்தை பிறந்ததற்கு பிறகு எடை கூடி கொழுகொழுவென இருந்த சுஜா தற்போது மீண்டும் ஸ்லிம்மாகி சிக்கென மாறியுள்ளார். அத்தகைய நிலையில் சுஜா போட்டோ ஷூட் நடத்திய புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். அது வைரலாகி ரசிகர்களை வாயடைக்க வைத்துள்ளது.