சினிமா

மறைந்த ஸ்ரீதேவியின் மரணத்திற்கு இதுதான் காரணமா? வெளிவந்த தகவல்!

Summary:

sri devi death reason


கடந்த 2018ம் ஆண்டு இந்திய சினிமாவே அதிரும் அளவிற்கு நடிகை ஸ்ரீதேவியின் மரணம்  திரைஉலகையே அதிர்ச்சியடையவைத்தது.

நடிகை ஸ்ரீதேவி உறவினர் திருமணத்திக்கு துபாய் சென்றபோது மரணமடைந்தார். அவரது உடலை இங்கு கொண்டு வரவே பெரிய பிரச்சனையாக இருந்தது. பாத்ரூமில் தண்ணீருக்குள் அவர் இறந்து கிடந்ததாக கூறப்பட்டது.

தற்போது மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் வாழ்க்கை வரலாறு பற்றி வெளிவந்த ஒரு புத்தகத்தில், அவருக்கு ரத்தக் கொதிப்பு நோய் இருந்ததாகவும், இதற்கு முன் இரண்டு, மூன்று முறை பாத்ரூமில் அவர் மயங்கி விழுந்திருக்கிறார் என்றும் எழுதப்பட்டிருந்தது.

அதேபோல தான் துபாயிலும் அவர் மயங்கி விழும்போது தெரியாமல் தண்ணீருக்குள் சிக்கி இறந்திருக்கிறார் என்று எழுதியுள்ளனர்.


Advertisement