சினிமா

ஹன்ஷிகாவிற்கு வில்லனாகும் பிரபல கிரிக்கெட் வீரர். !வெளியான தகவலால் ஷாக்கான ரசிகர்கள்!!

Summary:

Sreesanth act as villain to hansika

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் ஹன்சிகா. தனுஷ் நடிப்பில் வெளியான மாப்பிளை திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் எங்கேயும் காதல், வேலாயுதம், ஆம்பள, ரோமியோ ஜுலியட், ஆம்பள, அரண்மனை, போகன் போன்ற பல வெற்றி திரைப்படங்களில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.

 அதனைத் தொடர்ந்து தற்போது ஹன்சிகா நடிப்பில் உருவான மகா திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது.மேலும் அப்படத்தில் சிம்புவும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அதனை தொடர்ந்து ஹன்சிகா தற்போது தர்ம பிரபு படத்தை தயாரித்த ஸ்ரீவாரி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தில், ஹன்சிகா நடிக்க உள்ளார்.

ஹீரோயினுக்கு முக்கியத்துவம் வாய்ந்த காமெடி கலந்த திகில் படத்தை இயக்குநர் ஹரிஹரிஸ் இயக்குகிறார். மேலும் இப்படத்தை கோடை விடுமுறையை முன்னிட்டு  வெளியிட படக்குழுவினர் முடிவெடுத்துள்ளனர். இந்நிலையில், இப்படத்தில் ஹீரோயினுக்கு வில்லனாக பிரபல கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் நடிக்கவிருப்பதாக  தகவல் வெளியாகியுள்ளது.

 ஸ்ரீசாந்த் ஏற்கனவே ஹிந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிப் படங்களில் நடித்துள்ளார்.


Advertisement