ஒரு பாடகராக மட்டும் நமக்கு தெரிந்த எஸ்.பி.பாலசுப்ரமணியம் செய்யும் வேறு சில விஷயங்களையும் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்

ஒரு பாடகராக மட்டும் நமக்கு தெரிந்த எஸ்.பி.பாலசுப்ரமணியம் செய்யும் வேறு சில விஷயங்களையும் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்


SP.Balasubramanian in social activities

எஸ்.பி. பாலசுப்பிரமணியன் என்றாலே நாம் அனைவருக்கும் நினைவில் வருவது அவரது குரல் தான். தமிழ் திரையுலகில் அவர் பாடிய பல பாடல்கள் எந்த காலத்தில் கேட்டாலும் நமக்கு மண அமைதியை கொடுக்கும். அவர் தான் பிறந்த சொந்த கிராமத்திற்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருவது நாம் அனைவர்க்கும் தெரிவதில்லை. அதை பற்றிய ஒரு பதிவு தான் இது.

sp balasubramani

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அருகேயுள்ள கோணேட்டம்பேட்டை என்ற ஊரில் பிறந்தவர் எஸ்.பி.பாலசுப்ரமணியம். அந்த ஊரில் உள்ள தொடக்கப்பள்ளியில் தான் அவர் படித்தார். பிரபலமான பின்பு சொந்த ஊரை மறந்துவிட்டு நகரத்திலேயே தங்கிவிடும் மனிதர்களுக்கு மத்தியில், எஸ்.பி.பி.யின் செயல் வியக்க வைத்துள்ளது.

இவர் தன் சொந்த ஊருக்கு குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைத்து கொடுத்துள்ளார். இதன் திறப்பு விழா நடந்தது. விழாவில் கலந்து கொண்டு குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை ஊருக்கு அர்ப்பணித்துவிட்டு பேசியதாவது:

sp balasubramani

நான் இந்த மண்ணில் பிறந்தவன். எத்தனை நாடுகளுக்கு சென்றாலும் எவ்வளவு புகழ் உச்சிக்கு சென்றாலும், இந்த கிராமத்திற்கு வரும் போது  ஏற்படும் மகிழ்ச்சிக்கு ஈடு இணை இல்லை. இந்த கிராமத்திற்கு நான் செய்த காரியம் ஒன்றும் பெரிய விஷயம் அல்ல. இங்கில்லை, ஒவ்வொரு தெருவுக்கும் இரண்டு கழிவறைகள் கட்டி தர விரும்பினேன். அனால் அதை விட முக்கியம் கிராம மக்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர். எனவே நான் படித்த தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு குடிநீரும், கழிவறை வசதியும் ஏற்படுத்தி தருவது மிக முக்கியம் என்று முடிவு செய்து அதையும் நிறைவேற்றி உள்ளேன்.


நாம் தண்ணீரை வீணாக்க கூடாது. தற்போது இரு மாநிலங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது போன்ற சமயங்களில் எப்படி தண்ணீரை சேமிப்பது என்று யாருக்கும் தெரியவில்லை. நான் இங்கு அரசியல் பேச வரவில்லை என்றாலும், மனதில் பட்டத்தை சொல்கிறேன். எஸ்.பி.பாலசுப்ரமணியம் ஆந்திராகாரர். அவர் ஏன் இப்படியெல்லாம் செய்ய வேண்டும் என சிலர் நினைக்கலாம். அவர்களுக்கு சொல்கிறேன் நான் அந்திரக்காரனும் இல்லை, தமிழ்நாட்டுகாரனும் இல்லை, நன் இந்த உலகத்தை சேர்ந்தவன். இவ்வாறு அவர் பேசினார்.