
spb recent photo
பிரபல பின்னணி பாடகர் எஸ். பி.பாலசுப்ரமணியனுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில் அவர் கடந்த 5ம் தேதி சென்னை எம்ஜிஎம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் எஸ்பி பாலசுப்ரமணியன் உடல்நிலை மோசமடைந்து கவலைக்கிடமாக உள்ளது. மருத்துவ நிபுணர்களின் அறிவுரையின்படி அவர் தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார். அவருக்கு செயற்கைசுவாசம் பொருத்தப்பட்டு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என மருத்துவமனை நிர்வாகம் நேற்று அறிக்கை வெளியிட்டது.
அதனை தொடர்ந்து திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் அவர் விரைவில் குணமடைந்து மீண்டு வர வேண்டும் என பிரார்த்தனைகள் மேற்கொண்டுவருகின்றனர். தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் இவர் தம்ஸ் அப் காட்டுவது போன்ற புகைப்படம் வெளிவந்து ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது, அவர் மீண்டு வந்து பழைய பலத்துடன் பாட வேண்டும் என்பதே பலரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
Advertisement
Advertisement