சினிமா

பாடகர் யேசுதாஸுக்கு பணிவோடு பாதபூஜை செய்த எஸ்.பி.பி! எதனால் தெரியுமா? வைரலாகும் அரிய புகைப்படம்!

Summary:

Spb done foot worship to yesudoss

பாடகர் எஸ்.பி பாலசுப்ரமணியன் அவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு கடந்த மாதம் 5ம் தேதி சென்னையில் உள்ள தனியார்  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தநிலையில் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். இவரது மரணம் இந்திய அளவில் ரசிகர்களை கண்ணீரில் ஆழ்த்தியுள்ளது

எஸ்.பி.பி அவர்கள் 80களில் பாடகர் யேசுதாஸுடன் இணைந்து ஏராளமான ஹிட் பாடல்களை பாடியுள்ளார். மேலும் இவர்கள் இருவரும் இணைந்து பாடினாலே ஏகப்பட்ட வரவேற்பு கிடைக்கும். மேலும் இருவரும் இணைந்து இசை நிகழ்ச்சிகளிலும் பாடியுள்ளனர். 

 

இந்நிலையில் இசையுலகிற்கு வந்து 50 ஆண்டுகள் ஆனநிலையில் யேசுதாஸ் அண்ணாதான் எனது குரு. அவருக்கு பாத பூஜை செய்வது எனது காணிக்கை எனக்கூறி எஸ்.பி.பி யேசுதாஸின் பாதங்களை கழுவி பூஜை செய்துள்ளார். இந்த அரிய புகைப்படம் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.


Advertisement