சினிமா

அட.. இது வேற லெவல் பஞ்ச்! ஓட்டு போட்ட பின் மாஸாக சூரி என்ன கூறியுள்ளார் பார்த்தீங்களா!!

Summary:

நேற்று நடைபெற்ற தமிழக சட்டமன்ற தேர்தலில் வாக்குப்பதிவு செய்த நடிகர் சூரி, வேற லெவல் பஞ்ச்

நேற்று நடைபெற்ற தமிழக சட்டமன்ற தேர்தலில் வாக்குப்பதிவு செய்த நடிகர் சூரி, வேற லெவல் பஞ்ச் மெசேஜூடன் பதிவிட்டுள்ள ட்வீட் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

தமிழகம் முழுவதும் நேற்று சட்டமன்ற தேர்தல் விறுவிறுப்பாகவும், அமைதியாகவும் நடைபெற்று முடிந்துள்ளது. இதில் பொதுமக்கள், அரசியல் தலைவர்கள், விஜய், அஜித், சூர்யா, கார்த்தி, விக்ரம், சிவகார்த்திகேயன், சிம்பு, விஜய் சேதுபதி என பல திரை பிரபலங்களும் வாக்களித்து தங்களது ஜனநாயக கடமையை ஆற்றியுள்ளனர். 

 மேலும் வாக்களிப்புக்கு பின்பு அவர்கள் வெளியிட்ட புகைப்படங்களும் இணையத்தில் வைரலானது. இந்த நிலையில் தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி காமெடி நடிகராக வளர்ந்து வரும் சூரி வாக்களித்ததற்கு பின்பு புகைப்படத்துடன் வெளியிட்ட பதிவு வைரலாகிறது.

அந்த பதிவில் சூரி, என் மையும் நன் மை செய்யும் என்ற நம்பிக்கையுடன் வாக்கை பதிவு செய்து விட்டேன், என பஞ்ச்சாக ஒரு மெசேஜை பதிவிட்டுள்ளார். சூரியின் அந்த பதிவை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

 


Advertisement