சினிமா

திடீரென வீட்டில் மயங்கி விழுந்த நடிகர் சூரியின் முகத்தில் சூடு தண்ணீரை ஊற்றிய சூரியின் மகன்! வெளியான பரிதாப காட்சி..!

Summary:

Soori son face hot water

தமிழ் சினிமாவில் வெண்ணிலா கபடிக்குழு படத்தில் இடம்பெற்ற பரோட்டா காட்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார் நடிகர் சூரி. அதனை தொடர்ந்து பல வெற்றி படங்களில் நடித்து இன்று தமிழ் சினிமாவில் முன்னணி காமெடியனாக கலக்கி வருகிறார்.

இந்நிலையில் தற்போது அதிக அளவில் பரவி வரும் கொரோனா வைரஸின் தாக்கத்தால் நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது மத்திய அரசு. இதனால் மக்கள் வீட்டிலேயே முடங்கி கிடக்கும் சூழ்நிலை ஏற்ப்பட்டுள்ளது.

ஊரடங்கு உத்தரவால் நடிகர் சூரி தனது குழந்தைகளுடன் தனது நேரத்தை செலவழித்து வருகிறார் என்பதை அவர் வெளியிடும் வீடியோவின் மூலம் அறியமுடிகிறது. அதேபோல் இன்று புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் வழக்கம் போல் முதலில் கொரோனா பற்றிய விழிப்புணர்வை கூறி விட்டு குழந்தைகளுடன் விளையாடியுள்ளார். அப்போது திடீரென சூரி மயங்கி விழுந்துள்ளார். உடனே அவரது மகன் முகத்தில் சூடு தண்ணீரை ஊற்றும் வீடியோ காட்சி இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.


Advertisement