சினிமா

அட.. சிம்பிள் கியூட்! சொந்த ஊரில் இருக்கும் நடிகர் சூரியின் வீட்டை பார்த்துருக்கீங்களா!! புகைப்படம் இதோ!!

Summary:

அட.. சிம்பிள் கியூட்! சொந்த ஊரில் இருக்கும் நடிகர் சூரியின் வீட்டை பார்த்துருக்கீங்களா!! புகைப்படம் இதோ!!

தமிழ் சினிமாவில் பல முன்னணி பிரபலங்களுடன் இணைந்து ஏராளமான திரைப்படங்களில் காமெடி நடிகராக அசத்தி தற்போது முன்னணி காமெடி நடிகராக வலம் வருபவர் சூரி. இவருக்கென ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. காமெடியனாக நடித்து வந்த சூரி தற்போது ஹீரோவாகவும் நடிக்க களமிறங்கியுள்ளார்.  

அதாவது நடிகர் சூரி வெற்றிமாறன் இயக்கும் புது படம் ஒன்றில் ஹீரோவாக நடித்து வருகிறார். மேலும் தற்போது நிறைய படங்களில் கமிட்டாகி பிஸியாக நடித்து வருகிறாராம். மதுரையைச் சேர்ந்த நடிகர் சூரி நடிப்பு மட்டுமின்றி தனது சொந்த ஊரில் பல உணவகங்களை திறந்து நடத்தி வருகிறாராம். 

நடிகர் சூரி தற்போது சென்னையில் செட்டிலாகியுள்ளார். ஆனால் அவரது சொந்த ஊர் மதுரை பக்கத்தில் உள்ள இராஜாக்கூர். அங்கு இருக்கும் நடிகர் சூரியின் சொந்த வீட்டின் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.


Advertisement