சினிமா

தல அஜித்தை போலவே படப்பிடிப்பு தளத்தில் சமையல் செய்து அசத்திய நடிகர் சூரி! வைரலாகும் வீடியோ.

Summary:

Soori

தமிழ் சினிமாவில் பிரபல நகைச்சுவை நடிகராக மாறிவிட்டார் நடிகர் சூரி. விஜய், சூர்யா, சிவகார்த்திகேயன் என தமிழ் சினிமாவின் மிக பெரிய நடிகர்களின் படத்தில் நகைச்சுவை நடிகராக நடித்துவிட்டார் சூரி. படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்துவந்த இவர் வெண்ணிலா கபடி குழு திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானார்.

வெண்ணிலா கபடி குழு படத்தில் வரும் பரோட்டா சீன் இன்றுவரை பிரபலமாக உள்ளது. இந்த ஒரு காட்சிதான் இன்று இவரது வளர்ச்சிக்கு முக்கிய காரணம். இவர் எப்போதும் தன்னை சுற்றி உள்ளவர்களை சந்தோசமாக வைத்திருக்க வேண்டும் என்று விரும்புபவர். 

இந்நிலையில் தற்போது தல அஜித்தை போலவே படப்பிடிப்பு தளத்தில் அனைவருக்கும் தனது கையால் பஜ்ஜி செய்து கொடுத்து அசத்தியுள்ளார். தற்போது அந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகின்றது. 


Advertisement