சினிமா

எக்கச்சக்கமான நலஉதவிகள்! அரசியலில் குதிக்கிறாரா பிரபல வில்லன் நடிகர் சோனு சூட்! அவரே வெளியிட்ட தகவல்!

Summary:

Sonu sood talk about entry in politics

தமிழ்சினிமாவில் வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்ற கள்ளழகர், கோவில்பட்டி வீரலெட்சுமி, சந்திரமுகி, ஒஸ்தி, தேவி உள்ளிட்ட பல படங்களில் வில்லனாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானார் நடிகர் சோனு சூட். இவர் பாலிவுட்டிலும் ஏராளமான திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகராக உள்ளார். திரையுலகில் வில்லனாக நடித்தாலும் நிஜத்தில் இவர் நல்ல உள்ளம் படைத்த ஹீரோவாவார். 

கொரோனா பரவலால் ஊரடங்கு பிறப்பிக்கபட்ட நிலையில் அவர், கொரோனோவை ஒழிக்க பாடுபடும் மருத்துவர்கள், நர்ஸுகள் மற்றும் தூய்மைப்பணியாளர்கள் தங்குவதற்காக தனது 5 நட்சத்திர ஹோட்டலை வழங்கினார். புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு அவர்களது சொந்த ஊர்களுக்கு திரும்ப வாகனங்கள் ஏற்பாடு செய்து கொடுப்பது, வெளிநாட்டில் தவித்த மாணவர்களை தனி விமானத்தின் மூலம் தாய்நாட்டிற்கு அழைத்து வந்தது உள்ளிட்ட ஏராளமான உதவிகளை செய்து வருகிறார்.

இதனால் அவர் இந்திய அளவில் பிரபலமாகியுள்ளார். மேலும்  இவரை அனைவரும் பாராட்டி வருகின்றனர். இந்த நிலையில் சோனு சூட் அரசியலில் ஈடுபட வேண்டும் என பலரும் அழைப்பு விடுகின்றனர். 

 இதற்கு பதிலளித்து  சோனு சூட் கூறுகையில்,  கடந்த 10 ஆண்டுகளாகவே அரசியலில் இணைய எனக்கு ஏராளமான அழைப்புகள் வந்துக்கொண்டுள்ளது. என்னால் ஒரு நல்ல தலைவனாக இருக்கமுடியும் என கூறுகிறார்கள். ஆனால்  ஒரே நேரத்தில் இரண்டு படகில் சவாரி செய்ய எனக்கு விருப்பமில்லை. நான் ஒரு வேளை அரசியலில் ஈடுபடுவதாக இருந்தால் 100 சதவீதம் உழைப்பை கொடுப்பேன். எல்லோரும் பிரச்சினை இல்லாமல் வாழ்கிறார்களா என்பதை உறுதி செய்வேன். அதற்கு நிறைய நேரம் தேவைப்படுகிறது. தற்போது நான் தயாராக இல்லை என நினைக்கிறேன் என்று கூறியுள்ளார். 


Advertisement