இனி மரத்தில் ஏற தேவையில்லை! சிக்னல் கிடைக்காமல் சிரமப்பட்ட மாணவர்களுக்காக பிரபல நடிகர் செய்த அசத்தல் காரியம்!

இனி மரத்தில் ஏற தேவையில்லை! சிக்னல் கிடைக்காமல் சிரமப்பட்ட மாணவர்களுக்காக பிரபல நடிகர் செய்த அசத்தல் காரியம்!



sonu-sood-installs-mobile-tower-in-haryana-village

நாடு முழுவதும் கொரோனா பரவல் அச்சுறுத்தலால் ஊரடங்கு பிறப்பிக்கபட்ட நிலையில் ஏராளமான நலத்திட்ட உதவிகளை செய்து தற்போது இந்தியளவில் ஹீரோவாக மக்கள் மனதில் நிலைத்து இருப்பவர் வில்லன் நடிகர் சோனு சூட். அவர், ஊரடங்கில் கொரோனோவை ஒழிக்க போராடிய மருத்துவர்கள், நர்ஸுகள் மற்றும் தூய்மைப்பணியாளர்கள் தங்குவதற்காக தனது 5 நட்சத்திர ஹோட்டலை வழங்கினார். 

அதனை தொடர்ந்து புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு அவர்களது சொந்த ஊர்களுக்கு திரும்ப வாகனங்கள் ஏற்பாடு செய்து கொடுப்பது, வெளிநாட்டில் தவித்த மாணவர்களை தனி விமானத்தின் மூலம் தாய்நாட்டிற்கு அழைத்து வந்தது, விவசாயிக்கு டிராக்டர் வாங்கி கொடுத்தது, ஏழை மாணவர்களுக்கு போன் வாங்கி கொடுத்தது என தொடர்ச்சியாக ஏராளமான உதவிகளை செய்துவந்தார்.

Sonu sood

இந்நிலையில் ஹரியானா மாநிலத்திலுள்ள மோர்னி என்கிற கிராமத்தில்,  சிக்னல் கிடைக்காமல், ஆன்லைன் வகுப்புகளை கவனிக்க அந்த கிராமத்து சிறுவர்கள் மரத்தின் உச்சிக்கு சென்றுள்ளனர். மேலும் வகுப்புகளை கவனிக்க முடியாமலும் சிரமப்பட்டு வந்துள்ளனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது. 

இந்நிலையில் இதுகுறித்து அறிந்த நடிகர் சோனு சூட், அந்த மாணவர்களுக்கு உதவும் வகையில், அந்த கிராமத்தில் தற்போது டவர் ஒன்றை அமைத்துக்  கொடுத்துள்ளார்.  இந்நிலையில் தற்போது மாணவர்களுக்கு நன்கு சிக்னல் கிடைக்கிறது. இந்த நிலையில் அந்த மாணவர்கள் நடிகர் சோனு சூட்டிற்கு மகிழ்ச்சியுடன் நன்றி கூறியுள்ளனர்.