சினிமா

கொரோனா சிகிச்சை! மருத்துவர்களுக்காக தனது 6மாடி ஹோட்டலை இலவசமாக வழங்கிய பிரபல வில்லன் நடிகர்!

Summary:

Sonu sood donate floor for doctors

சீனாவில்  தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது 190க்கும் மேற்பட்ட உலக நாடுகளில் அசுர வேகத்தில் பரவிவருகிறது. இத்தகைய கொரோனா வைரஸ் இந்தியாவிலும் பரவியநிலையில் 6000க்கும் மேற்பட்டோர் கொரோனோவால் பாதிக்கபட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் 190க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் கொரோனா வைரஸ்  பரவுவதை கட்டுப்படுத்த  நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் கொரோனா பரவுவதை தடுக்க மருத்துவர்கள், காவலர்கள், தூய்மைப் பணியாளர்கள் அனைவரும் இரவு பகல் பாராமல் தீவிரமாக போராடி வருகின்றனர். இந்நிலையில் தங்களது உயிரையும் பொருட்படுத்தாமல், பணியாற்றுபவர்கள் தங்கிக் கொள்வதற்காக நடிகர் சோனு சூட் தனது 6 மாடி ஹோட்டலை இலவசமாக வழங்கியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், 
நமது உயிரைக் காப்பாற்றுவதற்காக ஓய்வின்றி இரவும் பகலும் உழைத்து வரும்  ஹீரோக்களுக்காக என்னால் முடிந்த உதவியை செய்வதில் நான் பெருமை அடைகிறேன். இத்தகைய இக்கட்டான தருணத்தில் சுகாதாரப் பணியாளர்கள் தங்கி கொள்வதற்காக மும்பையில் உள்ள எனது 6 மாடி ஹோட்டலை இலவசமாக வழங்குகிறேன். 

இந்த ஹீரோக்கள் செய்து வரும் மகத்தான கடமையை கருத்தில் கொண்டு, அவர்களுக்காக நாம் செய்யக்கூடியது இதுதான். நாம் அனைவரும் ஒன்றாக முன் வந்து அவர்களை ஆதரித்து உதவிசெய்யவேண்டும் என்று பதிவிட்டுள்ளார். 


Advertisement