அது என்ன A படமா? நான் அந்த மாதிரி நடிகையா? கோபத்தில் கொந்தளித்த பிரபல நடிகை!!

sonia agarwal talk about thanimai movie


sonia-agarwal-talk-about-thanimai-movie

தமிழ் சினிமாவில் காதல் கொண்டேன் என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை சோனியா அகர்வால். அதனைத் தொடர்ந்து அவர் 7ஜி ரெயின்போ காலனி,புதுப்பேட்டை, மதுர உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். அதனைத் தொடர்ந்து அவர் இயக்குனர் செல்வராகவனை திருமணம் செய்து கொண்டு சில வருடங்களிலேயே கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்றார். 

அதைத் தொடர்ந்து அவருக்கு தமிழில் பெரிய வாய்ப்புகள் எதுவும் கிடைக்காத நிலையில், அவர் சமீபத்தில் அயோக்யா படத்தில் ஒரு காட்சியில் மட்டும் நடித்துள்ளார்.

sonia agarwal க்கான பட முடிவு

 இதனை தொடர்ந்து தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு அளித்த பேட்டியில் சோனியா அகர்வால் கூறுகையில், தமிழ்நாட்டில் 15 வருஷங்களுக்கு மேல் வாழ்ந்து வருகிறேன். ஆனால் அனைவரும் என்னை மும்பை பெண்ணாகவே பார்க்கின்றனர். மேலும் மும்பைக்கு திருப்பி அனுப்பவே முயற்சியும் செய்கின்றனர். 

சமீபத்தில் நான் நடித்த தனிமை என்ற படத்தில் நடித்திருந்தேன். அதற்கு யு சர்டிபிகேட் வழங்கப்பட்டிருந்த நிலையில் அது ஏ சர்டிபிகேட் படம் என்ற வதந்திகள் பரவி ரிலீஸில் சிக்கல் ஏற்பட்டது. மேலும் படத்திற்கு சரியான தியேட்டர்கள் எதுவும் கிடைக்கவில்லை.

தொடர்புடைய படம்

எனக்கு இப்போது 36 வயதாகிறது என்னை இயக்குனர்கள் ஹீரோக்களுக்கு அம்மாவாக நடிக்க அழைக்கின்றனர் அது எனக்கு மிகவும் வருத்தமாக உள்ளது. நான் எனது வயதுக்கு மீறிய கதாபாத்திரங்களில் நடிக்க மாட்டேன் என கூறியுள்ளார்.