அப்படிதான் இருந்துச்சு.. இயக்குனர் செல்வராகவனுடன் விவாகரத்து! முதன்முறையாக உண்மையை உடைத்த நடிகை சோனியா அகர்வால்!!

அப்படிதான் இருந்துச்சு.. இயக்குனர் செல்வராகவனுடன் விவாகரத்து! முதன்முறையாக உண்மையை உடைத்த நடிகை சோனியா அகர்வால்!!


Sonia agarwal talk about divorce with selvaragavan

தமிழ் சினிமாவில் தனுஷ் நடிப்பில் இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் வெளிவந்த காதல் கொண்டேன் படத்தில் நடித்ததன் அறிமுகமானவர் நடிகை சோனியா அகர்வால். இப்படத்தில் அவரது எதார்த்தமான நடிப்பு அனைவரையும் பெருமளவில் கவர்ந்தது.  அதனைத் தொடர்ந்து அவர் தனுஷ், விஜய், ஆர்யா, ஸ்ரீகாந்த் ஆகியோருடன் இணைந்து சில படங்களில் நடித்துள்ளார்.

இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் சோனியா அகர்வால் நடித்த படங்கள் செம ஹிட்டானது. இந்த நிலையில் செல்வராகவன் மற்றும் சோனியா அகர்வாலுக்கு இடையே காதல் மலர்ந்து இருவரும் இரு வீட்டார் சம்மதத்துடன் 2006ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக 2010 ஆம் ஆண்டு பிரிந்தனர்.

sonia agarwal

அதனைத் தொடர்ந்து  செல்வராகவன் அஞ்சலி என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டு அவர்களுக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர். மேலும் சோனியா அகர்வால் தனியாகவே உள்ளார். 
இந்நிலையில் தங்களது விவாகரத்து குறித்து சோனியா அகர்வால் சமீபத்தில் மனம் திறந்துள்ளார். அவர், செல்வராகவனுடன் இணைந்து பணியாற்றியபோது அவரது கடின உழைப்பு எனக்கு மிகவும் பிடித்துபோனது. பின் இருவரும் காதலித்து திருமணமும் செய்து கொண்டாம்.

அப்பொழுது அளவு கடந்த சந்தோஷம் இருந்தது. ஆனால் அது நீடிக்கவில்லை. சில காரணங்களால் நாங்கள் பிரிய வேண்டிய நிலை ஏற்பட்டது. எங்களது திருமணத்தின் போது எவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தோமோ, அதேபோல பிரியும் போது அதிக மனவேதனையுடனே பிரிந்தோம் என கூறியுள்ளார்.