தமிழகம் Covid-19

தாயின் உடலை அடக்கம் செய்த அரைமணி நேரத்தில் மகன் செய்த நெகிழ்ச்சி செயல்.! குவியும் பாராட்டுக்கள்.!

Summary:

Son returned to corono work in few hours of mother dead

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் மக்கள் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனாவில் இருந்து தப்பிக்க மக்கள் அனவைரும் தங்கள் வீடுகளிலே முடங்கி உள்ளனர். கொரோனாவை கட்டுப்படுத்த அரசும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

அதன் ஒருபகுதியாக தமிழகத்தின் அணைத்து பகுதிகளிலும்  கிருமிநாசினி தெளிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், சென்னை, பெரம்பலூர் வி.களத்தூரில் மூன்று பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் அப்பகுதி முழுவதும் காலை மாலை என இரண்டு வேளைகள் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு வருகிறது.

இந்த பணியில் அய்யாதுரை என்பவர் ஈடுபட்டு வந்த நிலையில் அவரது தயார் அங்கம்மாள் உடல்நல குறைவால் காலமானார். தனது தாயார் இறந்த தகவலை உறவினர்களுக்கு தெரிவித்த அய்யாதுரை, யாரும் இப்போது உள்ள சூழலில் நேரில் வரவேண்டாம் எனக் கேட்டுக்கொண்டார்.

தாய் இறந்துவிட சோகத்தில் அய்யாதுரை பணிக்கு திரும்ப குறைந்தது ஒரு வாரம் ஆகும் என நகராட்சி அதிகாரிகள் மற்றும் துப்புரவு ஆய்வாளர்கள் நினைத்தனர். ஆனால், தனது தாயின் உடலை அடக்கம் செய்த உடனே அய்யாதுரை பணிக்கு திரும்பி அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளார்.

இதுகுறித்து கூறியுள்ள அவர், அம்மாவின் மரணம் தனக்கு வருத்தம் தந்தாலும், இக்கட்டான இந்த பேரிடர் காலத்தில் ஊர் சுத்தமாக இருக்கவேண்டும். கட்டாயம் இந்த சூழலில் எனது பங்களிப்பை கொடுக்கவேண்டும் என தான் எண்ணியதாகவும் அதனால்தான் பணிக்கு உடனடியாக திரும்பியதாக அய்யாதுரை கூறியுள்ளார்.

தாய் இறந்த சோகத்திலும், மக்களுக்காக பணிக்கு திரும்பிய அய்யாதுரைக்கு பலரும் தங்கள் இரங்கலையும், வாழ்த்துக்களையும் கூறிவருகின்றனர்.


Advertisement