வாவ்.. எம்புட்டு அழகு! முக்கியமான நாளில், முதன்முதலாக தனது செல்ல மகளின் புகைப்படத்தை வெளியிட்ட சினேகா!

வாவ்.. எம்புட்டு அழகு! முக்கியமான நாளில், முதன்முதலாக தனது செல்ல மகளின் புகைப்படத்தை வெளியிட்ட சினேகா!


Snega post her daughter photo first time

தமிழ் சினிமாவில் சுசி கணேசன் இயக்கத்தில் வெளிவந்த பைவ் ஸ்டார் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் திரையுலகில்  அறிமுகமானவர் நடிகர் பிரசன்னா. அதனை தொடர்ந்து அவர்  ஏராளமான ஹிட் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் ஹீரோவாக  மட்டுமின்றி, எந்த ஒரு கதாபாத்திரமாக இருந்தாலும் ஏற்று மிகவும் இயல்பாக நடிக்க கூடியவர்.

மேலும் நடிகர் பிரசன்னா சில படங்களில் கொடூர வில்லனாகவும் நடித்துள்ளார். அதனை தொடர்ந்து அவர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான சினேகாவை காதலித்து 2012 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு 5 வயதில் விஹான் என்ற மகன் உள்ளார். மேலும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவர்களுக்கு அழகிய பெண் குழந்தை பிறந்தது. அக்குழந்தைக்கு அவர்கள் ஆத்யந்தா என பெயரிட்டுள்ளனர்.

இந்நிலையில் நடிகர் பிரசன்னா  இன்று தனது 38 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அதனை முன்னிட்டு  நடிகை சினேகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் காதல் கணவருக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார். மேலும் முதன்முறையாக தனது மகளின் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார். அந்த கியூட் குடும்ப புகைப்படம் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.