சினிமா

என்னது.. நடிகர் பிரசன்னாவை விட சினேகா மூத்தவரா? அதுவும் எத்தனை வயசு தெரியுமா? தீயாய் பரவும் தகவல்!

Summary:

தமிழ் சினிமாவில் என்னவளே என்ற திரைப்படத்தில் நடித்ததன்  மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர்

தமிழ் சினிமாவில் என்னவளே என்ற திரைப்படத்தில் நடித்ததன்  மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை சினேகா. அதனை தொடர்ந்து அவர் ஆனந்தம், பார்த்தாலே பரவசம், விரும்புகிறேன், வசீகரா என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து ஏராளமான ஹிட் திரைப்படங்களில் நடித்துள்ளார்.

தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளிலும் நடித்துள்ள சினேகா அச்சமுண்டு அச்சமுண்டு என்ற படத்தில் நடித்தபோது பிரசன்னாவுடன் காதல் ஏற்பட்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு விஹான் என்ற ஆண் குழந்தையும், ஆத்யந்தா என்ற பெண் குழந்தையும் உள்ளது. 

Actress Sneha prasanna family Diwali Celebration photos! | Fashionworldhub

இந்த நிலையில் சிறந்த காதல் ஜோடியாக விளங்கி வரும் சினேகா மற்றும் பிரசன்னா குறித்து சுவாரஸ்யமான தகவல் ஒன்று வைரலாகி வருகிறது. அதாவது சினேகாவை விட பிரசன்னா ஒரு வயது சிறியவர் என்ற தகவல் பரவி வருகிறது. சினேகா அக்டோபர் 12ம் தேதி 1981 ஆம் ஆண்டு பிறந்துள்ளார். ஆனால் பிரசன்னா ஆகஸ்ட் 28ஆம் தேதி 1982 ஆம் ஆண்டு பிறந்துள்ளார்.  இந்நிலையில் சினேகா பிரசன்னா விட ஒரு வயது மூத்தவர் என்று கூறப்படுகிறது.
 


Advertisement