வருத்தப்படாத வாலிபர் சங்கம் வெளியாகி 10 ஆண்டுகள் நிறைவு.. கொண்டாடிய படக்குழு.!SK in varutha padatha valipar Sangam 10th year celebration

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் சிவகார்த்திகேயன். இவருடைய சினிமா வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்திய திரைப்படம் வருத்தப்படாத வாலிபர் சங்கம்.

இந்த திரைப்படத்தை அறிமுக இயக்குனராக பொன்ராம் இயக்கியிருந்தார். இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ஸ்ரீதிவ்யா நடித்திருந்தார். கிராமத்து பின்னணியில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

குறிப்பாக இந்த படத்தில் சிவகார்த்திகேயன்-சூரி கூட்டணியில் இடம்பெற்ற வசனங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்த நிலையில் வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படம் வெளியாகி 10 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.

இதனை கொண்டாடும் வகையில் இன்று சென்னையில் பிரபல திரையரங்கு ஒன்றில் சிறப்பு காட்சியாக திரையிடப்பட்டுள்ளது. இதில் ரசிகர்களுடன் சேர்ந்து சிவகார்த்திகேயன், ஸ்ரீதிவ்யா, சூரி, இயக்குனர் பொன்ராம் ஆகியோர் கலந்துகொண்டு படம் பார்த்து கொண்டாடியுள்ளனர்.